வவுனியாவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய ஆறு உணவகங்களுக்கு பூட்டு!
Vavuniya
Law and Order
Public Health Inspector
By Independent Writer
Courtesy: கபில்
வவுனியா நகரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய ஆறு உணவகங்கள் சுகாதார பரிசோதகர்களால் மூடப்பட்டுள்ளது.
குறித்த உணவகங்கள் நேற்றைய தினம் (06.02.2026) இவ்வாறு மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார பரிசோதகர்களால் அந்த உணவங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவை சுகாதார சீர்கேட்டுடன் இருந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற கட்டளை
இதனையடுத்து குறித்த உணவகங்களை நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் திருத்தப்பணிகளுக்காக எதிர்வரும் 14 நாட்களுக்கு மூடுமாறு சுகாதார பரிசோதகர்களால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள இரு உணவகங்கள், பழைய பேருந்து நிலையப்பகுதியில் அமைந்துள்ள சைவ உணவகம், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்கு அண்மையில் அமைந்துள்ள பிரபல உணவகங்களுக்கே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
குருதியில் நனைந்த தம்பலகாமம்…!
3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி