நாமல் ராஜபக்ஷவுக்கு ஒரு வழக்கிற்கு வழங்கப்பட்ட உத்தரவு
புதிய இணைப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (30) பிணை வழங்கியுள்ளது.
நாமல் ராஜபக்ஷ சிறைச்சாலைகள் அதிகாரிகளின் பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கே இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
முதலாம் இணைப்பு
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச மீண்டும் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

தொடரும் சட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜபக்ச நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் அதிகாரிகளின் பாதுகாப்புக்கு மத்தியில் அவர், இன்று (30) சிறைச்சாலை பேருந்தில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |