ரணிலுக்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Ranil Wickremesinghe Law and Order Saman Ekanayake
By Sathangani Sep 30, 2026 09:09 AM GMT
Report

புதிய இணைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோருக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துளது.

அதன்படி, சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுவதற்காக குறித்த வழக்கை எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதி மீண்டும் அழைப்பதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இவ்வழக்கு அழைக்கப்பட்ட போது, ரணில் விக்ரமசிங்க மற்றும் சமன் ஏகநாயக்க ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

விசாரணைகளின் நிலைமை மற்றும் இச்சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற வேண்டியதன் அவசியம் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

2023 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் நடைபெற்ற தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டதன் மூலம் அரசுக்குச் சொந்தமான 166 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான நிதியைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே குறித்த வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


முதலாம் இணைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோருக்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீண்டும் அழைக்கப்படவுள்ளது.

அதன்படி, குறித்த வழக்கு இன்று (30) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

அரச நிதியைத் துஷ்பிரயோகம் செய்ததாக எழுந்த சந்தேகத்தின் பேரில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எயார்பஸ் விவகாரம் : இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகவுள்ள நாமல்

எயார்பஸ் விவகாரம் : இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகவுள்ள நாமல்

சட்டமா அதிபரின் நிலைப்பாடு

சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு அது தொடர்பான ஆவணங்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னர் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.

ரணிலுக்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு! | Case Against Ex President Ranil To Be Taken Today

இதற்கமைய, சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்காக வழக்கை இன்று அழைப்பதற்கு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இறுதியாக வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாமலின் இலஞ்ச விவகாரம்: நீதிமன்றில் மீண்டும் அடிபட்ட மகிந்த - நாமல் - பசில் பெயர்கள்!

நாமலின் இலஞ்ச விவகாரம்: நீதிமன்றில் மீண்டும் அடிபட்ட மகிந்த - நாமல் - பசில் பெயர்கள்!

காணாமலாக்கல் சம்பவங்கள்! நீதிமன்றில் கோட்டாபயவிடம் சரமாரி கேள்விகள்

காணாமலாக்கல் சம்பவங்கள்! நீதிமன்றில் கோட்டாபயவிடம் சரமாரி கேள்விகள்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019