மனைவியை கொன்று தானும் உயிரை மாய்த்துக்கொண்ட முதியவர்: தீவிர விசாரணையில் காவல்துறை
கம்பஹா மாவட்டத்தில் கிரிந்திவெல - மில்லத்தே பகுதியில் 75 வயதுடைய தனது மனைவியை கொலை செய்ததாகக் கூறப்படும் 76 வயதுடைய கணவர், பின்னர் தனது உயிரையும் மாய்த்துக்கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் கொஹிலாகல வீதியில் உள்ள அவர்களது வீட்டில் நேற்று (29.09.2026) இடம்பெற்றுள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர், தனது மனைவி கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அவரை கொலை செய்தமைக்கான காரணம் குறித்தும் கடிதமொன்றை எழுதி வைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடுமையான நோய்
மேலும், தாம் உயிரிழந்த பின்னர் இருவரது உடல்களையும் ஒன்றாக வைக்குமாறும் அந்தக் கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

மனைவியை கொலை செய்த பின்னர் வீட்டிலிருந்து வெளியேறிய அவர், வேயங்கொடை பகுதியில் ரயிலில் பாய்ந்து உயிரைமாய்த்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |