ஜோர்தானிலிருந்து நாடு திரும்பிய 66 இலங்கையர்கள்
ஜோர்தானில் இரண்டு ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் சிரமத்திற்குள்ளான 66 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
இன்று (09) காலை அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊழியர்களுக்கு அறிவிக்காமல் முதலீட்டாளர்கள் காணாமல் போனதால் குறித்த நிறுவனம் மூடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இலங்கை தூதரகம் தெரிவிப்பு
குறித்த ஆடைத் தொழிற்சாலைகளில் பணியாற்றிய இலங்கையர்கள் குழுவொன்று தமக்கான அனைத்து சலுகைகளையும் பெற்றுக் கொண்டு நாட்டிற்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் ஜோர்தானிய தொழிற்சாலையில் பணிபுரிந்த மற்றுமொரு இலங்கையர் குழு எதிர்வரும் இரண்டு நாட்களில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஜோர்தானில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரகம் என்பன தலையிட்டு குறித்த குழுவினரை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |