வவுனியாவில் இளைஞன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது

Sri Lanka Police Vavuniya Sri Lanka Police Investigation
By Sathangani Aug 10, 2024 10:03 AM GMT
Report

வவுனியாவில் (Vavuniya) இளைஞன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று மோட்டர் சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஏழு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த வியாழக்கிழமை (08.08.2024) அதிகாலை வவுனியா பூந்தாேட்டம் பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவரை காணவில்லை என வவுனியா காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாடு தொடர்பில் வவுனியா தலைமை காவல்நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதயத்தை நொருங்கச் செய்த கர்ப்பிணிப் பெண்ணின் உயிரிழப்பு

இதயத்தை நொருங்கச் செய்த கர்ப்பிணிப் பெண்ணின் உயிரிழப்பு

முன்னெடுக்கப்பட்ட விசாரணை

இதன்பாேது சந்தேகத்தின் பேரில் சில இளைஞர்கள் கைது செய்யப்படட்டதுடன் அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளது.

வவுனியா, பூந்தோட்டம் பகுதிகளை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த புதன்கிழமை (07) மாலை பூந்தோட்டம் பகுதியில் உள்ள தனது வீட்டில் தனது பிறந்தநாள் நிகழ்வினை வெகுவிமர்சையாக கொண்டாடியுள்ளார்.

வவுனியாவில் இளைஞன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது | 7 Arrested For Kidnapping A Youth In Vavuniya

அந்த நிகழ்வுக்காக அங்கு உறவினர்கள், நண்பர்கள் என பலர் வந்திருந்த நிலையில் சில நெருங்கிய நண்பர்கள் மது போதையில் இருந்துள்ளனர்.

பிறந்தநாள் நிகழ்வினைச் சிறப்பிப்பதற்காக நண்பர்கள், இளைஞர் குழுக்களாக பாட்டுப்பாடி நடனம் ஆடினார்கள். இந்த நேரத்தில் மதுபோதையில் இருந்த நெருங்கிய நண்பர்கள் பிறந்தநாள் நிகழ்வுக்காக வந்த பெண் நண்பிகளுடன் சேர்ந்து நடனமாட முற்பட்ட வேளை பிறந்தநாள் கொண்டாடிய நண்பன் அதனை அனுமதிக்காது தடுத்துள்ளார்.

ஓகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள்

ஓகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள்

கடத்தப்பட்ட இளைஞன் 

இதனால் நெருங்கிய நண்பர்கள் மற்றும் இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் அங்கிருந்த உறவினர்கள் சமரசம் செய்து வைத்துள்ளனர்.

வவுனியாவில் இளைஞன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது | 7 Arrested For Kidnapping A Youth In Vavuniya

அதன்பின்னர் வியாழக்கிழமை (08) அதிகாலை 1மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் குழு ஒன்று பிறந்தநாள் கொண்டாடிய இளைஞனை கடத்திச் சென்று குட்செட் வீதியில் உள்ள கருமாரி அம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள பாழடைந்த வீட்டில் இளைஞனை அடைத்து வைத்து கடுமையாக கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த பாழடைந்த வீட்டில் இளைஞனை அடைத்து வைத்துவிட்டு கடத்தியவர்கள் தப்பிச் சென்ற நிலையில், காவல்துறையினர் இளைஞனை மீட்டு வவுனியா மாவட்ட  பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் இரண்டாக அதிகரித்த தமிழ் பொது வேட்பாளர்கள்

ஜனாதிபதி தேர்தலில் இரண்டாக அதிகரித்த தமிழ் பொது வேட்பாளர்கள்

7 இளைஞர்கள் கைது

இந்த நிலையில் குறித்த சம்பவம் தாெடர்பில் 20 வயது தொடக்கம் 22 வயது வரையுள்ள 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் பட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த 3 பேரும், வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த 2 பேரும் கோயில்புதுக்குளம் பகுதியை சேர்ந்த ஒருவரும், தோணிக்கல் பகுதியை சேர்ந்த ஒருவருவரும் உள்ளடங்கியுள்ளனர்.

வவுனியாவில் இளைஞன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது | 7 Arrested For Kidnapping A Youth In Vavuniya

அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று மோட்டர் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இளைஞர்களையும் மீட்கப்பட்ட மாேட்டர் சைக்கிள்களையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தேர்தல் சட்டங்களை மீறும் வேட்பாளர்களின் பதவிகளுக்கு ஏற்படப்போகும் சிக்கல்

தேர்தல் சட்டங்களை மீறும் வேட்பாளர்களின் பதவிகளுக்கு ஏற்படப்போகும் சிக்கல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016