பாகிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல் - எழுவர் மரணம்
Pakistan
Bomb Blast
By Beulah
பாகிஸ்தானில் வீதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடி வெடித்து ஏழு பேர் மரணித்துள்ளனர்.
பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகணத்தின் பஞ்ச்கூர் மாவட்டத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்டு வாகனத்தில் திரும்பிச் செல்லும் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில், யூனியன் கவுன்சில் தலைவர் இஷ்தியாக் யாகூப்பும் உள்ளடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலதிக விசாரணை

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், காயம் அடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேற்படி, இத்தாக்குதல் தொடர்பாக காவல்தறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இப்பகுதியில், கடந்த 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு, பலூச் விடுமுறை முன்னணி பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி