ஏழு கோடிக்கும் அதிகமான பெறுமதியுடை போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது!
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Arrest
By Shalini Balachandran
மொனராகலையில் 1,044.180 கிலோகிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொனராகலை - ஹம்பேகமுவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஏழு கோடியே 37 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 1,044.180 கிலோகிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்ட நடவடிக்கை
வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாகவே இந்தத் திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட கஞ்சாத் தொகையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஹம்பேகமுவ காவல்துறை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி