ஐக்கிய தேசியக் கட்சியின் 77வது நிறைவாண்டு இன்று
ஐக்கிய தேசியக் கட்சியின் 77வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நிகழ்வொன்று இடம் பெற்றது
இந்நிகழ்வானது கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் சமய நிகழ்வுகளுடன் கட்சியின் மூத்த தலைவர்களால் முன்னாள் தலைவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செய்து ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கட்சியை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முதல் படிகள் தொடங்கப்பட்டதன் மூலம், கட்சி உறுப்பினர்கள் இணையவழியில் கட்சியுடன் இணையும் வாய்ப்பைப் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி மாநாடு
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன, கட்சியின் தேசிய அமைப்பாளரும் அதிபரியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, கட்சியின் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம், முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி கருணாசேன கொடித்துவக்கு, நிறைவேற்றுப் பணிப்பாளர் ஷாமல். செனரத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அத்துடன், “கட்சியின் ஆண்டு நிறைவு விழா மற்றும் மாநாட்டை செப்டம்பர் 10 ஆம் திகதி கொழும்பு லேக் ஹவுஸ் முன்பாக நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட போதிலும், நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதனை ஒத்திவைக்க கட்சி அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
இந்தக் கொண்டாட்டம் நடைபெறும் திகதியை வெள்ளிக்கிழமை நடைபெறும் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்” என்று கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்