புத்தளம் கடற்கரையில் மீட்கப்பட்ட பெருமளவு புகையிலை இலைகள்
Puttalam
Sri Lanka
Sri Lanka Navy
By Sathangani
புத்தளம் - தில்லையடி பகுதியில் இன்று (26) காலை சிறிலங்கா கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 792 கிலோ கிராம் (ஈரமான எடை) புகையிலை இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சட்டவிரோதமான முறையில் கடல் பகுதியினூடாக கொண்டுவரப்பட்டு கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த 23 பொதிகளிலிருந்து இவ் இலைகள் மீட்கப்பட்டன.
ஒரு இலட்சம் புகையிலை இலைகள்

சிறிலங்கா கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுக்கும் நோக்ககில் கடற்படையினர் வழமையாக தேடுதல் நடவடிக்கையினை மேற்கொள்கின்றனர்.
இதேவேளை சுமார் ஒரு இலட்சம் கிலோ கிராம் (ஈரமான எடை) புகையிலை இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படும் வரை கடற்படையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
