சிறிலங்கன் ஏர்லைன்ஸின் 8 கோடி ரூபாய் விவகாரம் : தயாசிறி ஜயசேகர விடுத்துள்ள கோரிக்கை
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் நிதிப் பரிமாற்றத்தில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் பாரிய தவறு குறித்து அரசாங்கம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் துபாய் முகவர் செயற்பாடுகளுக்காக வழங்கப்பட வேண்டிய நிதி, தவறுதலாக வேறொரு வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாக தயாசிறி ஜயசேகர குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை கிளை மற்றும் துபாய் செயற்பாடுகளுடன் தொடர்புடைய கொடுப்பனவுகளே தவறுதலாகப் பரிமாறப்பட்டுள்ளதாகவும் இந்த நிதி அபுதாபி இஸ்லாமிய வங்கியில் உள்ள ஒரு கணக்கில் தவறுதலாக வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரக திர்ஹம்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சுமார் 97,450 ஐக்கிய அரபு அமீரக திர்ஹம் தவறாகப் பரிமாறப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 80 மில்லியன் ரூபாய்க்கும் (8 கோடி ரூபாய்) அதிகமாகும்.

இந்தத் தொகை பின்னர் வேறொரு வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இதனால் அந்தப் பணத்தை மீண்டும் மீட்பதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
இது தொடர்பான நம்பகமான தகவல்கள் எமக்குக் கிடைத்துள்ள நிலையில், அரசாங்கம் உண்மைகளைச் சரிபார்த்து, இந்த நிதி முறைகேடு அல்லது தவறு குறித்து முறையான விசாரணையை முன்னெடுக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |