பயணிகளிடம் அதிக கட்டணம் அறவிட்ட 80 பேருந்துகள் : எடுக்கப்பட்ட நடவடிக்கை

Sri Lankan Peoples Transport Fares In Sri Lanka Srilanka Bus Sri Lanka Transport Board
By Sathangani Apr 19, 2026 09:11 AM GMT
Report

இலங்கையில் புத்தாண்டு காலத்தில் பயணிகளிடம் அதிகப்படியான கட்டணங்களை அறவிட்ட 80 பேருந்துகளுக்கு அபராதம் விதிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நடமாடும் பேருந்து பரிசோதனை பிரிவின் பிரதானி ரோஹண வத்தகே இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 8ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை 680 பேருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

ஆரம்பமாகும் புதிய தாழ்தள பேருந்து சேவை! வெளியாகியுள்ள தகவல்

ஆரம்பமாகும் புதிய தாழ்தள பேருந்து சேவை! வெளியாகியுள்ள தகவல்

பயணச்சீட்டுகளை வழங்காத பேருந்துகள்

இதன்போது அதிக கட்டணம் வசூலித்த 80 பேருந்துகள் கண்டறியப்பட்டதுடன், மேலதிகமாகப் பெறப்பட்ட பணம் மீளவும் பயணிகளுக்கே வழங்கப்பட்டதுடன் குறித்த பேருந்து நிர்வாகங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

பயணிகளிடம் அதிக கட்டணம் அறவிட்ட 80 பேருந்துகள் : எடுக்கப்பட்ட நடவடிக்கை | 80 Buses Fined For Overcharging Passengers

நேற்று (18) மாத்திரம் சுமார் 150 பேருந்துகள் சோதனையிடப்பட்டதில், 12 பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி வரை 24 மணித்தியாலங்களும் முன்னெடுக்கப்படவுள்ளது” என தெரிவித்தார்.

இதேவேளை அதிக கட்டணம் அறவிடும் மற்றும் பயணச்சீட்டுகளை வழங்காத பேருந்துகள் குறித்து முறைப்பாடளிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, பயணிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்தித்த இந்திய துணை ஜனாதிபதி

இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்தித்த இந்திய துணை ஜனாதிபதி

தொலைபேசி இலக்கம்

இது தொடர்பாக எந்தவொரு காவல் நிலையத்திலும் முறைப்பாடு செய்ய முடியும் என அந்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரெண்டா தெரிவித்தார்.

பயணிகளிடம் அதிக கட்டணம் அறவிட்ட 80 பேருந்துகள் : எடுக்கப்பட்ட நடவடிக்கை | 80 Buses Fined For Overcharging Passengers

அத்துடன், மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அல்லது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கும் இது குறித்து அறிவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

முறைப்பாடுகளை அறிவிக்க 1955 என்ற உடனடி தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் செயல்படும் என்றும் நிலான் மிரெண்டா மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக நாடு முழுவதும் விசேட பிரார்த்தனை

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக நாடு முழுவதும் விசேட பிரார்த்தனை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026