மத்திய கிழக்கு மோதல்களுக்கு மத்தியிலும் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்
2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை எட்டு இலட்சத்தை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, கடந்த 4 மாதங்களில் 809,595 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும், இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 68,961 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இந்தியாவிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள்
ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்த நிலையில் பண்டிகைக் கால விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாகவே பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக 19,822 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இரண்டாவதாக பிரித்தானியாவில் இருந்து 84,748 சுற்றுலாப் பயணிகளும் மூன்றாவதாக ரஸ்யாவில் இருந்து 69,478 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |