பாகிஸ்தானில் மர்மநபர்களால் துப்பாக்கி சூடு: பலர் பலி
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பேருந்தில் பயணித்த 9 பேர் கடத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலை பலுசிஸ்தான் மாகாணத்தில் இயங்கி வரும் தீவிரவாத அமைப்பு நடத்தியிருக்கலாம் என அந்நாட்டு பாதுகாப்பு படையினர் சந்தேகிக்கின்றனர்.
சுட்டுக்கொலை
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்தை பயங்கரவாதிகள் வழிமறித்துள்ளனர்.
இதன்போது, பேருந்தில் பயணித்த 9 பேர் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலம் அங்குள்ள பாலம் அருகே மலைப் பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
கடும் கண்டனம்
அதேவேளை, அந்த நெடுஞ்சாலையில் சென்ற கார் மீது பயங்கரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 2 பேர் பலியானதுடன் 2 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இச்சம்பவத்துக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, பலுசிஸ்தான் முதலமைச்சர் மிர் சர்பராஸ் புக்டி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பிரித்தானியா தனது குடிமக்களுக்கு பயணம் செய்வது ஆபத்தானது என எச்சரிக்கும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானும் இணைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |