யாழில் உயிருடன் புதைக்கப்பட்ட மக்கள்: ஒரே இடத்தில் குவியலாக 3 மண்டையோடுகள்
யாழ். (Jaffna) செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வின் போது, 3 மண்டையோட்டுத் தொகுதிகள் குவியலாக ஒரே இடத்தில் காணப்பட்டதாக பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வீ.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் 40 ஆவது நாள் அகழ்வுப் பணிகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன.
மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நேற்று 08 ஆவது நாளாகவும் இடம்பெற்றது.
எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்
இதன்போது, புதைகுழியில் இருந்து புதிதாக 07 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 09 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதேவேளை கட்டம் கட்டமாக இதுவரையில் 49 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, நேற்று அகழ்ந்து எடுக்கப்பட்ட 07 எலும்புக்கூட்டு தொகுதியுடன் இதுவரையில் 198 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இதுவரையில் 218 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

