கடந்த 24 மணித்தியாலத்தில் 914 பேர் கைது
arrest
police
srimlanka
By Shalini
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 914 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இதை தெரிவித்தார்.
2020 அக்டோபர் 30 ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டதில் இருந்து சுமார் 17,300 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், மேற்கு மாகாணத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் போது 4324 முச்சக்கர வண்டிகள் பரிசோதிக்கப்பட்டன மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறியதற்காக 20 முச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டதுடன் 35 குடியிருப்பாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் தனிமைப்படுத்தல் மற்றும் பயணக்கட்டுப்பாடுகளை மீறுவோரை கைதுசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்