அதிகரித்து வரும் தற்கொலைகள் : கடந்த மூன்று ஆண்டுகளில் 9,700 பேர் தற்கொலை
By Kathirpriya
கடந்த மூன்று ஆண்டுகளில் சிறிலங்காவில் சுமார் 9,700 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
தற்கொலை செய்துகொண்டுள்ளவர்களின் புள்ளிவிபரங்களை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள ஆய்வறிக்கையின் மூலமாக இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
இதற்கு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இது அதிகரித்த எண்ணிக்கையாக உள்ளதாக அவர் கூறினார்.
83 சதவீதம்

சென்ற ஆண்டில் (2022) மாத்திரம் 3,406 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள், அதில் 2,832 பேர் ஆண்களாவர்.
இது 2022 இல் தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கையில் 83 சதவீதம் எனவும் அவர் கூறியுள்ளார்.
பொருளாதார பிரச்சினைகளின் காரணமாக 192 பேரும், குடும்ப பிரச்சினைகள் காரணமாக 593 பேரும் சென்ற ஆண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக வசந்த அத்துகோரள மேலும் தெரிவித்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்