யாழில் பிறந்து ஒரு நாளில் உயிரிழந்த குழந்தை - கொழும்பிற்கு உடற்கூற்று மாதிரிகள்
யாழில் (Jaffna) பிறந்து ஒரு நாளே ஆன ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
அல்வாய் தெற்குஅல்வாய் பகுதியைச் சேர்ந்த சத்தி துஷ்யந்தினி என்ற தம்பதிகளின் மூத்த பிள்ளையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், உயிரிழந்த குழந்தை கடந்த செவ்வாய்க்கிழமை எட்டாம் திகதி பிறந்துள்ளது.
உடல் சுகயீனம்
இந்தநிலையில், குழந்தைக்கு உடல் சுகயீனம் ஏற்பட்தையடுத்து புதன்கிழமை ஒன்பதாம் திகதி அன்று மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அன்றைய தினமே பி.ப 1.30 மணியளவில் குழந்தை உயிரிழந்ததுள்ள நிலையில் குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் (Namasivayam Biremkumar) மேற்கொண்டார்.
மேலும், உடற்கூற்று பரிசோதனைகளை மேற்கொண்ட நிலையிலும் மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் குழந்தையின் உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு (Colombo) அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகள் - கஜிந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 16 மணி நேரம் முன்
