செங்கடலில் பிரித்தானிய கப்பல் மீது தாக்குதல்
செங்கடல் பகுதியில் பிரித்தானியாவிற்கு சொந்தமான கப்பலொன்று தாக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று (06) காலை செங்கடல் வழியாக குறித்த கப்பல் பயணித்துக்கொண்டிருந்த போதே ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஹெடெய்டாவிற்கு மேற்கே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என பிரித்தானிய இராணுவத்தின் கடல்வர்த்தகம் தொடர்பான அமைப்பு தெரிவித்துள்ளது.
சிறிய சேதம்
இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்டவில்லை என்பதுடன் கப்பலின் ஜன்னல்களிற்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது.
குறித்த கப்பல் தாக்கப்படுவதற்கு முன்னர் அந்தப்பகுதியில் சிறிய படகு ஒன்று காணப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்தின் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்குக் கப்பல் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது சந்தேகம்
பார்படோஸ் கொடியுடன் குறித்த கப்பல் சென்று கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த தாக்குதல் சம்பவத்துக்கு எந்த குழுவும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.
இந்நிலையில் யேமனில் உள்ள ஈரானிய ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |