கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பேருந்து விபத்தில் சிக்கியது -எட்டுபேர் காயம்
Colombo
Jaffna
Accident
By Sumithiran
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாதில் 8 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாரவில - மூடுகடுவ பிரதேசத்தில் ஹலவத்தை - கொழும்பு பிரதான வீதியில் இன்று காலை (02.05.2023) இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்தின் பின்னணி
முதுகடுவ பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை நிரப்பிக்கொண்டு பிரதான வீதியில் சென்று கொண்டிருந்த பேருந்து மீது லொறி மோதியதில், பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியுள்ளது.
இதன் காரணமாக மின்கம்பம் சேதமடைந்துள்ளதுடன், மாரவில உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் , இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் பேருந்து சாரதியும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்