தனது மூன்று குழந்தைகளை கொன்று புதைத்த கொடூர தந்தை கைது
தனது மூன்று குழந்தைகளை கொன்ற தந்தையை கைது செய்துள்ள தாய்லாந்து காவல்துறையினர் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
சந்தேகநபரான சோன்சக் சாங்சிங், தனது முந்தைய திருமணத்தில் இருந்த இரண்டு குழந்தைகளையும் கொன்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சமையலறையில் சிறுமி புதைப்பு
கடந்த வாரம் இரண்டு வயது சிறுமியின் சடலம் வீட்டின் சமையலறையில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குழந்தைகளின் அழுகையை தாங்கிக் கொள்ள முடியாது அவர்களை கொன்றதாகவும் சந்தேக நபர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
நான்கு முறை திருமணம்
இந்த கொலைகள் தொடர்பாக அவரது தற்போதைய மனைவி மற்றும் முன்னாள் மனைவி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர் நான்கு முறை திருமணம் செய்து கொண்டவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.