பிரபல ஆண்கள் பாடசாலையில் சக மாணவர்களின் தாக்குதலால் சுய நினைவை இழந்த மாணவன்
களுத்துறை பிரதான ஆண்கள் பாடசாலையில் உயர்தர பிரிவில் கல்வி கற்கச் சென்ற மாணவனை மனிதாபிமானமற்ற முறையில் துன்புறுத்தி தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக களுத்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்தனர்.
களுத்துறை பிரதான ஆண்கள் பாடசாலை ஒன்றில் உயர்தரப் பிரிவில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் மூன்று மாணவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவன் வாக்குமூலம்

உயர்தர வகுப்பில் புதிதாக கற்கச் சென்ற மாணவன் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டதாகவும், அவர் சிகிச்சைக்காக களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தாக்குதலுக்கு உள்ளான மாணவன் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுய நினைவு இழப்பு

தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் அந்தரங்க உறுப்பு உடைந்ததால் தையல் போட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், 24 மணி நேரத்திற்கும் மேலாக அவர் சரியாக சுயநினைவு இல்லாமல் இருந்ததாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சந்தேகநபர்கள் மூவரும் களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்