இன்று இரவு கோர சம்பவம் - ஒரு பிள்ளையின் தந்தை அடித்துக் கொலை
Sri Lanka Police Investigation
Crime
Death
By Sumithiran
ஹெல்மெட் அணிந்த இளைஞர்கள் குழுவொன்று நடத்திய தாக்குதலில் ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்துள்ளார்.
இன்று (14ஆம் திகதி) இரவு வெலிபென்ன பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் வெலிபன்ன கல்மட்ட பகுதியைச் சேர்ந்த ரங்கவிராஜ் என்ற 34 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
வீதியில் இடம்பெற்ற விவாதம்

வீதியொன்றில் பயணித்த போது இடம்பெற்ற விவாதம் நீண்டநேரம் சென்றதை அடுத்து இக்கொலை இடம்பெற்றுள்ளதாக வெலிபென்ன காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொலைச் சம்பவம் தொடர்பில் 16 வயதுடையவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்தெரிவித்தனர்.
எஞ்சியவர்கள் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், அவர்களைக் கண்டுபிடிக்க காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி