கனடாவில் பல வாகனங்கள் மோதி கோர விபத்து - மூவர் உயிரிழப்பு
Canada
Accident
By pavan
கனடாவில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கனடாவின் இட்டாபிகொக் பகுதியின் 427ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த விபத்தில் சிக்கிய ஒர் வாகனம் குடை சாய்ந்து தீப்பற்றிக் கொண்டதாக றொரன்டோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி

சம்பவ இடத்திலேயே இந்த விபத்தில் சிக்கிய இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் மற்றுமொருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்துச் சம்பவம் காரணமாக குறித்த வீதி சில மணித்தியாலங்கள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி