35 ஆயிரம் ரூபாயிற்கு விற்பனை செய்யப்பட்ட எலுமிச்சை பழம்! ஊர் மக்கள் கூறும் விடயம்
Lemon
India
Hinduism
Money
By Shalini Balachandran
மஹா சிவராத்திரி தினத்தில் எலுமிச்சை பழமொன்று 35,000 ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையான சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்திலமைந்துள்ள கோயிலொன்றிலேயே எழுமிச்சை பழமொன்று இவ்வாறு விற்பனையாகியுள்ளது.
சிவபுரி கிராமத்திற்க்கு அருகில் பழம் பூசைய்யன் கோயிலில் இந்த எலுமிச்சை பழம் உட்பட மேலும் சில பொருட்கள் சிவனுக்கு படைக்கப்பட்டதை தொடர்ந்து அவை ஏலத்தில் விடப்பட்டுள்ளன.
எலுமிச்சை பழ ஏலம்
இந்த ஏலத்தில் சுமார் 15 பக்தர்கள் கலந்துகொண்டதுடன் கடைசியில் ஈரோட்டைச் சேர்ந்த பக்தர் ஒருவர் இந்த எலுமிச்சை பழத்தை ஏலத்தில் கொள்வனவு செய்துள்ளார்.
அதாவது ஏலத்தில் வெற்றி பெறுபவர் செல்வச் செழிப்புடன் வாழ்வாரென்பது அக்கிராம மக்களின் நம்பிக்கையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்