இலங்கைக்கு அருகே உருவான காற்றழுத்த தாழ்வு! விடுக்கப்பட்ட எச்சரிக்கை
வங்காள வளைகுடாவில் நிலவி வந்த வளிமண்டலக் சீரற்ற தன்மையானது, இலங்கையின் அண்மைப் பகுதியில் குறைந்த காற்றழுத்தப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை பேரிடர் முன் எச்சரிக்கை மையம் வெளியிட்ட அறிக்கையின் படி,
அறிவிப்பு வெளியிடப்பட்ட நேரத்தில் அந்தக் குறைந்த காற்றழுத்தப் பகுதி 10.1 வடஅட்சரேகை மற்றும் 82.5 கிழக்கு தீர்க்கரேகை அருகே அமைந்திருந்தது.
மழையுடன் கூடிய வானிலை
இந்த வானிலை அமைப்பின் காரணமாக, நாடு முழுவதும் தற்போது நிலவும் மழையுடன் கூடிய வானிலை தொடரும்.

மேலும், தீவைச் சூழ்ந்த ஆழ்கடல் மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளிலும், வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளிலும் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு நிலை ஏற்படக்கூடும்.
இதன்படி எதிர்கால வானிலை அறிவிப்புகள் குறித்து பொதுமக்களும், கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படை சமூகத்தினரும் அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |