கனடாவின் ரொறன்ரோ நகரில் காணப்படும் பாரிய குறைப்பாடு
                                    
                    Toronto
                
                                                
                    Canada
                
                                                
                    World
                
                        
        
            
                
                By Dilakshan
            
            
                
                
            
        
    கனடாவின் (Canada) ரொறன்ரோ (Toronto) நகரின் வடிவமைப்பில் பாரிய குறைபாடு காணப்படுவதாக அந்த நகரத்தின் முகாமையாளர் போல் ஜொன்சன் தெரிவித்துள்ளார்.
கடும் மழை ஏற்படும்போது வெள்ளத்தை கட்டுப்படுத்தக் கூடிய வகையில் நகரம் வடிவமைக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை ரொறன்ரோவில் பெய்த கடும் மழையினால் பாரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
பெரும் சவால்கள்
அத்துடன், வீடுகள், அதிவேக நெடுஞ்சாலைகள் உட்பட அனைத்து கட்டமைப்புகளும் நீரில் மூழ்கி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், வெள்ளத்தை கட்டுப்படுத்தக் கூடிய வகையில் நகரம் கட்டமைக்கப்படாததால் பெரும் மழை காலங்களில் பெரும் சவால்களுக்கு முகங் கொடுக்க நேரிடுவதாகவும் நகரத்தின் முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்