திடீரென பற்றியெரிந்த மகிழுந்து
                                    
                    Sri Lanka Police
                
                                                
                    Sri Lanka Police Investigation
                
                                                
                    Fire
                
                        
        
            
                
                By Sumithiran
            
            
                
                
            
        
    வாதுவ, பொத்துப்பிட்டிய கல்லுபர பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று இன்று (13ம் திகதி) தீயில் எரிந்து முற்றாக நாசமாகியுள்ளதாக வாத்துவ காவல்துறையினர் தெரிவித்தனர்.
களுத்துறை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவைச் சேர்ந்த நான்கு பேர் அங்கு வந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இயந்திரக் கோளாறால்
வாகனத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

தீ விபத்தினால் கல்லுபர பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து, வாத்துவ காவல்துறை போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் வாகன நெரிசலை தளர்த்த நடவடிக்கை எடுத்தனர்.
மேலதிக விசாரணை
வாதுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் | 
 
    
                                
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        