80 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் தோன்றும் அரிய வால் நட்சத்திரம்...!
80 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமியை கடந்து செல்லும் வால் நட்சத்திரம் தற்போது தென்பட தொடங்கியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விண்வெளியில் பல கிரகங்களை தாண்டி பயணிக்கும் வால்மீன்கள்(comet) சூரிய குடும்பத்திற்குள் புகுந்து செல்வது உண்டு. அவ்வாறாக செல்லும் வால்மீன்களில் சிலவற்றை அதிஷ்டம் இருந்தால் வெறும் கண்களாலேயே பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.
வானியல் விஞ்ஞானிகள் வைத்துள்ள பெயர்
அவ்வாறான ஒரு அரிய வால்மீன் தற்போது பூமியை கடந்து சென்று கொண்டிருப்பதை வானியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.2023ம் ஆண்டில் கண்டறியப்பட்ட இந்த வால்மீனை சி/2023 என வானியல் விஞ்ஞானிகள் பெயரிட்டனர்.
80 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனை சுற்றி வந்து திரும்ப செல்லும் இந்த வால்மீன் தற்போது சூரியனை சுற்றி பூமிக்கு அருகில் கடந்து செல்கிறது.
வால்மீனை பார்ப்பதற்கான வாய்ப்புகள்
சூரியன் மறையும் நேரத்தில் மேற்கு திசையில் இந்த வால்மீனை பார்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
சிறிய அளவிலான தொலைநோக்கிகள் கொண்டு பார்த்தால் அதன் நீண்ட வால் பகுதியையும் காண முடியும் என்கின்றனர் வானியல் ஆர்வலர்கள். ஒக்டோபர் 24 வரை இந்த வால் நட்சத்திரத்தை காணமுடியும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |