அவசர அவசரமாக டுபாய் பறந்த கோட்டாபயவின் குடும்ப உறுப்பினர்!
MAHINDA RAJAPAKSHA
SRILANKAN CRISIS
NIRUPAMA RAJAPAKSHA
FLEW TO DUBAI
By Kanna
மஹிந்த ராஜபக்சவின் நெருங்கிய உறவினரான முன்னாள் துணை அமைச்சர் நிரூபமா ராஜபக்ச நேற்று நாட்டை விட்டு வெளியேறி டுபாய் சென்றுள்ளதாக தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளன.
இதன்படி, நிரூபமா ராஜபக்ச நேற்று இரவு 10.25 மணியளவில் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-655 விமானத்தில் சென்றுள்ளார் எனவும் அவர் டுபாய் பயணித்துள்ளார் எனவும் விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டவிரோதமாக வெளிநாடுகளில் சொத்துக்களை வைத்துள்ள பிரபலங்களின் பெயர்கள் உள்ளடங்கிய பண்டோரா பட்டியலில் நிரூபமா ராஜபக்சவின் கணவரின் பெயரும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி