காட்டுப்பகுதியிலிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள்
STF
Sri Lanka Police Investigation
By Jaso
திக்வெல்ல, ரத்மலை, கிரினெலிகண்டேவில் உள்ள காட்டுப் பகுதியில் இருந்து இன்று (26) காவல்துறை சிறப்பு அதிரடிப் படையின் தங்காலை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவால் ஒரு ரிவோல்வர், ஒரு கைக்குண்டு மற்றும் ரி-56 துப்பாக்கிகளுக்கான மூன்று ரவைகள் கைப்பற்றப்பட்டன.
இந்த துப்பாக்கிகளை பச்சை நிற பையில் இருந்த நிலையில் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
சிறப்பு அதிரடிப் படையின் தங்காலை முகாமின் காவல் ஆய்வாளர் எம்.எம்.கே. பீரிஸ் உள்ளிட்ட குழுவினரால் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இந்த ஆயுதங்களின் உரிமையாளர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை, மேலும் இந்த துப்பாக்கிகள் மேலதிக விசாரணைக்காக திக்வெல்ல காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |