கவனமாக இருங்கள்! காவல்துறையின் விசேட அறிவித்தல்
இலங்கையில் காவல்துறையினர் போல் நடித்து பல கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு ஆள்மாறாட்டம் செய்பவர்கள் குறித்து பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சிவில் உடையில் காவல்துறையினர் போல் பாவனை செய்து பயண பொதிகள், வாகனங்கள், வீடுகள், மோட்டார் சைக்கிள்கள் போன்றவற்றை சோதனை செய்வது அவசியம் எனக்கூறி சொத்துக்களை கொள்ளையடிப்பது தொடர்பில் நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளிலிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.
அதனை தொடர்ந்தே இவ்வாறான அறிவிப்பை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
காவல்துறை வலியுறுத்து
மேலும், காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அல்லது சிறிலங்கா காவல்துறையின் விசேட காவல்துறை பிரிவு அதிகாரிகளைத் தவிர, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் காவல்துறை உத்தியோகத்தர்கள் சிவில் உடையில் இவ்வாறான சோதனைகளை மேற்கொள்ள மாட்டார்கள் என காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
