இலங்கை மக்களின் உணவு நிலை - வெளியான அதிர்ச்சிகர அறிக்கை
உலக உணவுத் திட்டம் கடந்த டிசம்பர் மாதம் இலங்கையில் உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 35% மக்கள் தங்களுக்கு கிடைக்கும் உணவின் அளவைக் குறைத்துள்ளனர் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 67% மக்கள் தங்களுக்கு விருப்பமான உணவுகளை உட்கொள்வதைக் குறைத்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பின்மை

43% மக்கள் தங்கள் உணவின் அளவைக் குறைத்துள்ளனர். 33% மக்கள் தொடர்ந்து உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதுடன், ஊவா மாகாணத்தில் அதிகளவான உணவுப் பாதுகாப்பின்மை பதிவாகியுள்ளது. இது 43% ஆகும்.
மிகக் குறைந்த உணவுப் பாதுகாப்பின்மை வடக்கு மாகாணத்தில் பதிவாகியுள்ளது, இது 25% ஆகும். 38% தோட்டக் குடும்பங்களும், 34% கிராமப்புறக் குடும்பங்களும், 28% நகர்ப்புறக் குடும்பங்களும் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதாக அறிக்கை கூறுகிறது.
உணவுப் பற்றாக்குறை

ஏனைய மாகாணங்களில் சப்ரகமுவ 38%, மத்திய 34%, கிழக்கு 33%, மேற்கு 33%, தெற்கு 31%, வடமேற்கு 30%, வடமத்திய 29% உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மக்கள் அதிகம் உண்ணும் பாண் நிறைக்கு ஏற்ப உற்பத்தி செய்யப்படுவதில்லை என உணவக உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
பொருட்களின் விலை குறைக்கப்பட்டதன் பலன் மக்களுக்கு வழங்கப்படவில்லை என சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்தார்.