‘லியோ’ பார்க்கச் சென்றவர்களுக்கு வாள்வெட்டு
Batticaloa
Sri Lanka Police Investigation
Leo
By Sumithiran
விஜய் நடித்து வெளியான லியோ படத்தை பார்வையிடச் சென்றவர்களுக்கு வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு - செங்கலடி திரையரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை (20) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு
இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு கைலகலப்பாக மாறி அது வாள் வெட்டில் முடிந்துள்ளது. சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

இதில், 4 பேர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம் 10 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்