நான்கு வருட ஆட்சியில் பைடன் எடுத்த விடுமுறை : வெளியாகும் கடும் விமர்சனம்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்(joe biden) தனது 4 வருட பதவிக்காலத்தில் 532 விடுமுறை நாட்களை எடுத்துள்ளார் என்று நியூயோர்க் போஸ்ட் தெரிவித்துள்ளது, இது ஒரு சராசரி அமெரிக்க அலுவலக ஊழியர் 48 ஆண்டுகளில் எடுக்கும் சராசரி விடுமுறை நாட்களைப் போன்றது என்று குடியரசுக் கட்சியின் தேசியக் குழு ஆய்வு தெரிவிக்கிறது.
ஒரு அமெரிக்க அலுவலக ஊழியர் ஆண்டுக்கு சராசரியாக 11 விடுமுறை நாட்களைப் பெறுகிறார் என்று நியூயோர்க் போஸ்ட் கூறியது, அதன்படி, ஜனாதிபதி பைடன் தனது நான்கு வருட காலத்தில் ஒரு அமெரிக்க அலுவலக ஊழியர் 50 ஆண்டுகளுக்கு எடுக்கும் சராசரி விடுமுறை நாட்களை அனுபவித்துள்ளார்.
1326 நாள் பதவிக்காலத்தில் 532 நாட்கள் விடுமுறை
81 வயதான ஜனாதிபதி பைடன் தனது 1326 நாள் பதவிக்காலத்தில் 532 நாட்களை விடுமுறையில் கழித்துள்ளார், அதாவது அவர் தனது பதவிக்காலத்தில் 40 சதவீதத்தை விடுமுறைக்காக எடுத்துக் கொண்டுள்ளார் என்று நியூயோர்க் போஸ்ட் செய்தித்தாள் சுட்டிக்காட்டியுள்ளது.
உலக அளவில் நிச்சயமற்ற தன்மையும், பணவீக்கமும் அதிகமாக இருக்கும் நேரத்தில், அவர் இத்தனை நாட்கள் விடுமுறை எடுப்பதை நியாயப்படுத்த முடியாது என்று குடியரசுக் கட்சியின் தேசியக் குழு வெளிப்படுத்தியதில் இருந்து நிறைய விமர்சனங்கள் உள்ளன என்று செய்தித்தாள் கூறியது.
ஜனாதிபதி பைடன் நேற்று (07) டெலவேரில் உள்ள ரெஹோபோத் கடற்கரையில் கழித்த விடுமுறை, அவர் எடுத்த 16வது தொடர் விடுமுறை என்று குடியரசுக் கட்சியின் தேசியக் குழு வெளிப்படுத்தியுள்ளதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
அதிக விடுமுறை எடுக்க காரணம்
பைடன் மீண்டும் போட்டியிடக் கூடாது என்ற கடுமையாக வலியுறுத்தல் விடுக்கப்பட்டதால் கடந்த ஜூலை முதல் முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி போன்ற மற்ற ஜனநாயகக் கட்சியினருடன் கோபமாக இருப்பதால், பைடன் அதிக விடுமுறைகளை எடுக்க ஆசைப்பட்டதாக இப்போது ஒரு கருத்து உள்ளது என்று செய்தித்தாள் குறிப்பிட்டது.
இரண்டு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகள், பராக் ஒபாமா(Barack Obama) மற்றும் ரொனால்ட் ரீகன்(Ronald Reagan), இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளனர், மேலும் அவர்கள் விடுமுறை நாட்களில் 11 சதவீத விடுமுறையை எடுத்துள்ளனர், மேலும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்(Donald Trump) 1461 நாட்களில் 381 நாட்கள் விடுமுறை எடுத்துள்ளார்.
மிகக் குறைந்த அளவில் பணியாற்றிய அமெரிக்க அதிபர்
அதன்படி, 532 விடுமுறை நாட்களை எடுத்து, மிகக் குறைந்த அளவில் பணியாற்றிய அமெரிக்க அதிபர் என்ற பெருமையை அதிபர்பைடன் பெற்றுள்ளார் என்று நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |