டுபாயில் இருந்து வந்த பெண்ணொருவர் கட்டுநாயக்கவில் கைது!
Bandaranaike International Airport
Puttalam
Dubai
By Sathangani
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) வைத்து பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய காவல்துறையினரால் நேற்று (13) குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
4.9 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரட்டுகளுடன் கைது செய்யப்பட்ட குறித்த பெண் புத்தளம் மாவட்டத்தை சேர்ந்த 54 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
டுபாயில் இருந்து வந்தவர்
சந்தேக நபரான பெண் நேற்றைய தினம் டுபாயில் (Dubai) இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது குறித்த பெண்ணின் பயணப்பொதிகளில் இருந்து 29,800 சிகரட்டுக்கள் அடங்கிய 149 கார்டூன்கள் விமான நிலைய காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக விமான நிலைய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 15 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி