யாழில் ஜனாதிபதியின் கவனம் திரும்பும் வரை நடை பயணத்தை தொடரும் குடும்பம்
Jaffna
Anura Kumara Dissanayaka
Sri Lanka
By Harrish
யாழில் (Jaffna) இளம் குடும்பம் ஒன்று தங்கள் மீது ஜனாதிபதியின் கவனம் திரும்பும் வரை நடை பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த இளம் குடும்பத்தினர் தங்களுக்கு குடியிருக்க வீடு காணி இல்லை என்ற நிலையில், பேருந்து நிலையத்திலேயே சில வாரமாக தங்கியிருந்ததையடுத்து இவ்வாறு நடை பயணத்தை முன்னெடுத்துள்ளனர்.
அச்செழு, அச்சுவேலியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (06.04.2025) மாலை இந்த நடைபயணத்தை அவர்கள் தொடங்கியுள்ளனர்.
ஏழு வயதான ஆண் பிள்ளை மற்றும் ஆறு வயதுடைய பெண் பிள்ளையுடன் கணவன், மனைவி நால்வராக இந்த நடை பயணத்தை அவர்கள் ஆரம்பித்துள்ளனர்.
இது தொடர்பில் நடை பயணத்தை ஆரம்பித்துள்ள குடும்பம் பதிலளித்ததை கீழ்வரும் காணொளியில் காண்க...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
