ஏ9 வீதியில் தொடரும் அவலம் : கால்கடுக்க காத்து நிற்கும் மாணவர்கள்

Mullaitivu School Incident Srilanka Bus
By Sumithiran Oct 21, 2024 04:54 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

அதிகளவான பேருந்துகள் பயணம் செய்யும் ஏ9 வீதியில் மனித உரிமைகள் ஆணைக்குழு வரை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டும் இன்றுவரை பேருந்து சாரதிகளின் அசமந்த போக்கு காரணமாக மாணவர்கள் உரிய நேரத்தில் பாடசாலை செல்ல முடியாது தவிக்கின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம்,கிழவன்குளம்,திருமுறிகண்டி பகுதிகளை சேர்ந்த பாடசாலை மாணவர்கள் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட மாங்குளம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகின்றனர்.

உரிய நேரத்தில் பாடசாலை செல்லமுடியாத நிலை

இவர்கள் ஏ 9 வீதியில் அதிகளவான பேருந்துகள் சென்றும் உரிய நேரத்தில் பாடசாலை செல்லமுடியாத நிலை தொடர்கிறது.  இந்த விடயமாக கிராம மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் செய்து நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. அத்தோடு குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை நடத்தி உரிய அதிகாரிகளிடம் விளக்கம் கோரிய நிலையில் நடவடிக்கைகள் எடுப்பதாக இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

ஏ9 வீதியில் தொடரும் அவலம் : கால்கடுக்க காத்து நிற்கும் மாணவர்கள் | A9 Injustice Continues For School Going Students

இதன் பின்னணியில் சிறிது காலம் மாணவர்களை பேருந்துகள் உரிய வகையில் ஏற்றிச் சென்றன. இருப்பினும் தற்போது பேருந்துகள் மாணவர்களை ஏற்றாமல் செல்கின்ற நிலையில் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

போலி இலக்கத் தகட்டுடன் சொகுசு கார் : கைப்பற்றியது தெல்லிப்பழை காவல்துறை

போலி இலக்கத் தகட்டுடன் சொகுசு கார் : கைப்பற்றியது தெல்லிப்பழை காவல்துறை

அதிகளவான பேருந்துகள்

 ஒரு சில அரச மற்றும் தனியார் பேருந்து சாரதிகள் மாணவர்கள் மீது அக்கறை கொண்டு அவர்களை ஏற்றிச் சென்றாலும் அதிகளவான பேருந்துகள் மாணவர்களை ஏற்றாமல் செல்கின்ற நிலையில் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

ஏ9 வீதியில் தொடரும் அவலம் : கால்கடுக்க காத்து நிற்கும் மாணவர்கள் | A9 Injustice Continues For School Going Students

இதேபோன்று ஏ9 வீதியில் பல இடங்களில் இருந்தும் பாடசாலை செல்லும் மாணவர்கள் குறிப்பாக முகமாலை , மன்னகுளம் , உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த நிலை தொடர்கிறது இலங்கை போக்குவரத்து சபை வடக்கு அதிகாரிகள் இந்த விடயத்தில் அசமந்தப்போக்குடன் செயற்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு முன்வைக்கினறனர்.

தமிழரசுக் கட்சி வேட்பாளரின் மோட்டார் சைக்கிள் காவல்துறையினரால் பறிமுதல்!

தமிழரசுக் கட்சி வேட்பாளரின் மோட்டார் சைக்கிள் காவல்துறையினரால் பறிமுதல்!

இந்த விடயமாக புதிய ஜனாதிபதி, புதிதாக பொறுப்பேற்ற வடமாகாண ஆளுநர், மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்க தவறின் ஏ9 வீதியை மறித்து பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

  

ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
நன்றி நவிலல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025