முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழர்களுக்காக குரல் கொடுத்த தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
பேரின பெரும்பான்மைவாதத்தால் வீழ்த்தப்பட்ட மக்கள், அவர்களுக்கான நீதி மற்றும் நல்வாழ்க்கையைப் பெற முழு உரிமை உடையவர்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் தமிழக அரசியல் பிரமுகருமான ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் பதிவொன்றையிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு அவர் இந்தப் பதிவை இட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால்
குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், “மனித உரிமைக்கு எதிரான எந்தவொரு அதிகாரமும் அர்த்தமற்றது.
மனித நேயத்திற்கு எதிரான எந்தவொரு ஆதிக்கமும் அப்புறப்படுத்த வேண்டியது.
பேரின பெரும்பான்மைவாதத்தால் வீழ்த்தப்பட்ட மக்கள், அவர்களுக்கான நீதி மற்றும் நல்வாழ்க்கையை பெற முழு உரிமை உடையவர்கள். மனித உரிமைக்கு எதிரான எந்தவொரு அதிகாரமும் அர்த்தமற்றது. மனித நேயத்திற்கு எதிரான எந்தவொரு ஆதிக்கமும் அப்புறப்படுத்த வேண்டியது. மனித நல்வாழ்விற்கு எதிரான அனைத்து… pic.twitter.com/qYh0VckLT0
— Aadhav Arjuna (@AadhavArjuna) May 18, 2026
மனித நல்வாழ்விற்கு எதிரான அனைத்து போர்களும் எதிர்க்க வேண்டியது.
போரில்லா சமூகத்தைப் படைப்போம் மானுட அறத்தை உலகிற்கு சொல்வோம் முள்ளிவாய்க்கால் நினைவை உள்ளத்தில் ஏந்துவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |