பல மில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் கட்டுநாயக்கவில் சிக்கிய ஊழியர்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் (BIA) பல மில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
54 வயதுடைய விமான நிலைய ஊழியர் ஒருவரே இன்று (14) காலை 6:50 மணியளவில் இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
இவரிடமிருந்து 210.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 5.941 கிலோகிராம் தங்க பிஸ்கட்டுகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
51 தங்க பிஸ்கட்டுகள்
குறித்த ஊழியர், 51 தங்க பிஸ்கட்டுகளை, இரு கால்களின் காலுறைகளுக்குள் மறைத்து வைத்து, ஊழியர்களுக்கான வெளியேறும் வாயில் (staff gate) வழியாக கடத்த முயன்றதாக குறிப்பிடப்படுகிறது.
குறித்த 24 கரட் தங்கத்தின் பெறுமதி 210,524,575.35 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளின் சோதனையின் போது இந்த தங்க பிஸ்கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக சுங்கம் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
