பெண் சட்டத்தரணியின் இழிவான செயல் : உயர் நீதிமன்றம் எடுத்த தீர்மானம்
வழக்கு ஆவணத்தை மென்று அழித்த பெண் சட்டத்தரணிக்கு எதிரான வழக்கு முடியும் வரை குறித்த சட்டத்தரணியை பணி இடைநீக்கம் செய்ய உயர் நீதிமன்றம் இன்று (25) தீர்மானித்துள்ளது.
12 வருடங்களாக சட்டத்தரணியாக கடமையாற்றிய குறித்த சட்டத்தரணியின் செயற்பாடு பாரதூரமான நடவடிக்கையாக கருதப்பட வேண்டுமென பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
தொழில் நெறிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில்
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, உயர் நீதிமன்ற நீதிபதிகளான காமினி அமரசேகர மற்றும் ஏ.எச்.எம்.டி., நவாஸ் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழு முன் சட்டத்தரணிக்கு எதிராக தொழில் நெறிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இந்த வழக்கு பரிசீலிக்கப்பட்டது.
தகாத முறையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டில்
கெக்கிராவ நீதவான் நீதிமன்ற பதிவாளர் காரியாலயத்தில் உள்ள வழக்கு ஆவணத்தை வலுக்கட்டாயமாக எடுத்து வாயில் போட்டு அழித்து சட்டத்தரணி தகாத முறையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டில் பிரதிவாதி சட்டத்தரணிக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை முன்வைத்துள்ளார்.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நடுவர் குழு, தொழில் நெறிமுறைகளை மீறியதாக சட்டத்தரணிக்கு எதிரான வழக்கை ஏப்ரல் 2ஆம் திகதி விசாரிப்பதற்கு உரிய உத்தரவை பிறப்பித்தது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |