மோட்டார் சைக்கிள் - கார் மோதி கோர விபத்து..! இருவர் உயிரிழப்பு
எஹெலியகொட காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் நேற்று (03) இடம்பெற்ற வாகன விபத்தில் 22 வயதுடைய யுவதி உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
எஹெலியகொட காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட கொழும்பு- இரத்தினபுரி பிரதான வீதியின் மின்னான பிரதேசத்தில் மகிழூந்து எதிர் திசையில் வந்த உந்துருளியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன் போது பலத்த காயமடைந்த உந்துருளி செலுத்திய நபர் மற்றும் பின்னால் அமர்ந்து பயணித்த பெண் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
22 வயதுடைய பெண் 35 வயதுடைய ஆண்
உயிரிழந்தவர்கள் 22 வயதுடைய பெண் ஒருவரும், 35 வயதுடைய ஆண் ஒருவரும் உள்ளடங்குவதுடன் அவர்கள் குருவிட்ட பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்காக அவிஸ்ஸாவெல்ல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. வான் சாரதியின் கவனயீனம் விபத்து காரணம் என்றும் விபத்து தொடர்பில் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் எஹலியகொட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
