வடக்கு கிழக்கில் அரச பேருந்துகள் கோர விபத்து!
யாழ்ப்பாணத்தில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை 750 இலக்க வழித்தட பேருந்து ஒன்றே பருத்தித்துறை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளை, விபத்திற்குள்ளாகியுள்ளது.
பேருந்து விபத்து
இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை சிறுப்பிட்டி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து, வாகன திருத்தகத்தினுள் சென்று விபத்துக்கு உள்ளானது.
குறித்த விபத்தில், வாகன திருந்தகத்தினுள் நின்ற வாகனங்களும் சேதமடைந்துள்ளன.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான வீதியில் இன்று அதிகாலை இலங்கை போக்குவரத்து சபை பேருந்து பாரிய விபத்தில் சிக்கிய நிலையில் அதில் பயணித்தவர்களும் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.
பனை மரத்துடன் மோதி விபத்து
இன்று அதிகாலை வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த பேருந்து ஊறணிச்சந்தியில் உள்ள பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் இரண்டு பயணிகள் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேகமாக வந்த குறித்த பேருந்து வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமல் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பலத்த சேதம்
இந்த விபத்து காரணமாக பேருந்தின் முன்பக்க பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.









ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
