தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பியவேளை நேர்ந்த துயரம் -ஊரே பெரும் சோகத்தில்
கட்டுகஸ்தோட்டை நாயலதென்னவில் இருந்து ஜம்புகஹாபிட்டிய வீதியில் பயணித்த வானின் பிரேக் செயலிழந்ததால் ஏற்பட்ட விபத்தில் 14 வயது மகளும் 47 வயதுடைய தந்தையும் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்னர்.
கொழும்பு ராஜகிரிய பிரதேசத்தில் வசிப்பவர்கள் கட்டுகஸ்தோட்டை ஜம்புகஹாபிட்டியவில் உள்ள மரண வீடொன்றிற்கு சென்றுவிட்டு கம்பளை பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பிரேக் செயலிழந்ததால் ஏற்பட்ட அனர்த்தம்

குறித்த மாணவி தனது தந்தையுடன் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் படுகாயமடைந்த தந்தையும் மகளும் கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்.
ஊரே பெரும் சோகத்தில்

பொல்கொல்ல பல்லேகுன்னபன பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் பணிபுரியும் மூன்று பிள்ளைகளின் தந்தையான ரோஹன ஜயந்த (47) மற்றும் அவரது இளைய மகள், கடுகஸ்தோட்டை சமுத்திராதேவி மகளிர் கல்லூரியில் கல்வி கற்கும் 14 வயதுடைய மதுஷி மேகலா தனஞ்சனா ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
தந்தை மற்றும் மகள் உயிரிழந்தமை அவர்கள் வசிக்கும் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.