பதுளை-கண்டி வீதியில் வாகன விபத்து - கடற்படை அதிகாரி பலி!
பதுளை - ரந்தெனிகல(கண்டி) வீதியில் அமைந்துள்ள புத்தங்கோட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கந்தகெட்டிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, இந்த விபத்து இன்று (30.03.2026) இடம்பெற்றுள்ளது.
விபத்து குறித்து மேலும் தெரிய வருகையில்,
மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விபத்து
பதுளையிலிருந்து கண்டிக்குச் சென்றுகொண்டிருந்த தனியார் பயணிகள் பேருந்து, முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயன்றபோது, பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டிருப்பது காவல்துறை விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் கேகாலை - புலத்கோபிட்டிய - அலவத்தூறாவில் உள்ள கதியமுல்ல பகுதியைச் சேர்ந்த அலஹக்கூன் முதியன்செலகே ரசித் ரண்டிக அலஹக்கூன் (33) என்ற கடற்படை அதிகாரி என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டகெட்டிய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 4 மணி நேரம் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
3 நாட்கள் முன்