மூன்று வாகனங்கள் கோர விபத்து: சிறுமி உட்பட 5 பேர் காயம்
பதுளை - மஹியங்கனை பிரதான வீதியின் மீகஹகிவுல 16ஆம் தூண் சந்திக்கு அருகில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோரவிபத்துக்குள்ளாகியதில் சிறுமி ஒருவர் உட்பட 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து இன்று காலை (15.09.2026) ஏற்பட்டுள்ளது.
தனியார் பேருந்தும், மோட்டார் சைக்கிளும், முச்சக்கர வண்டியுமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளன.
கோர விபத்து
விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், முச்சக்கர வண்டியை செலுத்திய பெண், அதில் பயணித்த நான்கு அரை வயதுச் சிறுமி மற்றும் மேலும் மூன்று பெண்கள் காயமடைந்துள்ளனர்.

விபத்தின் பின்னர் காயமடைந்தவர்கள் மீகஹகிவுல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களின் நிலைமை கவலைக்கிடமானதால் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கந்தகெட்டிய காவல்துறை போக்குவரத்து பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
போர்க்குற்றவாளி இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்... 9 மணி நேரம் முன்