பேருந்து - பாரவூர்தி நேருக்கு நேர் மோதி விபத்து : ஐவர் காயம்
நுவரெலியா (Nuwara Eliya) - ஹட்டன் (Hatton) ஏ7 பிரதான வீதியில் பேருந்தும் பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பேருந்தில் பயணித்த சாரதி உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (02) காலை 8 மணியளவில் லிந்துலை மட்டுக்கலை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருகையில், நுவரெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்தும், கொழும்பில் (Colombo) இருந்து அம்பேவேலவிற்கு சென்ற பாரவூர்தியும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
இவ்விபத்தில் தனியார் பேருந்து அதிகமாக சேதமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பெய்து வரும் மழையினால் வீதி வழுக்கும் நிலையில் காணப்படுவதால், ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் வாகனங்களை செலுத்தும் போது கவனமாகவும், மெதுவாகவும் செலுத்துமாறு லிந்துலை காவல்நிலைய பொறுப்பதிகாரி சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
