புத்தளம் - ஆனமடுவ பகுதியில் விபத்து! நால்வர் படுகாயம்
accident
today
puttalam
By Vanan
புத்தளம் - ஆனமடுவ பிரதேசத்தில் இன்று புதன்கிழமை (20) இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளதாக ஆனமடுவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் - கல்லடி பிரதேசத்தில் இருந்து பொலன்னறுவ பகமூன பகுதியை நோக்கிச்சென்ற வான் ஒன்று, ஆனமடுவ நகரை அண்மித்த பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த போது, எதிர்த்திசையில் வந்த டிமோ பட்டா லொறியொன்று மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டதையடுத்து இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது குறித்த வான் வீதியை விட்டு விலகி அருகிலுள்ள சிறிய பாலத்திற்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்து இடம்பெற்ற போது குறித்த வானில் 8 பேர் பயணித்துள்ள போதிலும் 4 பேர் மட்டுமே காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் கூறினர்.