போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் ஏற்பட்டுள்ள ஆபத்து!
corona
police
sri lanka
By Shalini
போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் மூலம் அண்மைய நாட்களில் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து, போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக நீண்ட நாட்கள் விதிக்கப்பட்டு இருந்த பயணக்கட்டுப்பாடுகள் கட்டம் கட்டமாக நீக்கப்பட்டதுடன், எதிர்வரும் 31ஆம் திகதி மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தும் நீக்கப்படவுள்ளது.
இந்த நிலையிலேயே வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.