காவல்துறை போல் வேடமணிந்து இளைஞனை கடத்திய கும்பல்
அவிசாவளை வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வீதியில் காத்திருந்த 18 வயதுடைய இளைஞனை கடந்த 14ஆம் திகதி மாலை மோட்டார் சைக்கிளில் வந்த காவல்துறை உத்தியோகத்தர்கள் போன்று தோற்றமளித்த இருவர் கடத்திச் சென்றதாக அவிசாவளை காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடத்தப்பட்ட இளைஞனின் கழுத்தை கட்டி மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான தங்க நகையை பறித்தெடுத்ததுடன் அந்த இளைஞனிடம் இருந்து 600 ரூபா பணத்தை கொள்ளையடித்து இளைஞனை வழியிலேயே கைவிட்டுச் சென்றதாக அவிசாவளை காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காவல்நிலையத்தில் முறைப்பாடு
அவிசாவளை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனே இது தொடர்பில் அவிசாவளை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இளைஞரை கடத்திச் சென்று தங்க நகை மற்றும் பணத்தை திருடி தப்பியோடிய இருவர் குறித்த தகவல் இதுவரை காவல்துறைக்கு கிடைக்கவில்லை.
விசாரணைகள் ஆரம்பம்
சந்தேக நபர்களை கைது செய்வதற்காக அவிசாவளை காவல் நிலைய குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
